Friday, June 26, 2009

பட்டப்பெயர்களுக்கு பெயர்போன இடம்

பட்டப்பெயர் வைப்பது ஒரு கலை. அந்த கலையில் தேர்ந்தவர்கள் மிகச்சிலர். பட்டப்பெயர் வைப்பதில் எல்லையட்ற்ற திறமை கொண்டோர் கோவை ராமலிங்கம் காலனி மக்கள், மனிதர்களுக்கு மட்டுமின்றி எல்லா பொருட்களுக்கும் பாரபட்சம் இன்றி பட்டப்பெயர் வைத்த கூட்டம் அது. ராமலிங்கம் காலனியில் வளர்ந்ததால் அங்கே புழாக்கத்தில் இருந்த பட்டபெயர்களில் சில எனக்கு நினைவில் உள்ளது, அவற்றை பொது நலம் கருதி இங்கு வெளியிடுகிறேன்.

மல்லி - இவன் பொழுது போகவில்லை என்றால் நண்பர்களின் வீடுகளுக்கு phone செய்து வீட்டில் bomb வைத்திருபதாக சொல்லி விளையாடுவான். இவனுடைய இம்சைகள் உச்சத்தில் இருக்கும்பொழுது 'காதலன்' திரைப்படம் வெளியானது. அதில் ஊர் ஊராக சென்று bomb வைக்கும் வேலை ரகுவரனுக்கு, தவிர ரகுவரனின் கதாபாத்திரத்தின் பெயர் மல்லி என்பதால் இவனுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.

கொத்துமல்லி - இவன் பெயருக்கு தனி காரணம் ஏதும் இல்லை. இவன் மல்லியின் தம்பி என்பதால் இவன் பெயர் கொத்துமல்லி.

குண்டுமல்லி - ஒரு தருணத்தில் கொத்துமல்லி நிறைய தின்று தின்று குண்டாகியிருந்தான், அப்பொழுது அவனை குண்டுமல்லி என்றழைத்தனர்.

நாமம் pant - Tommy Hilfigure வடிவமைத்த Track Pant வகையை சேர்ந்த இந்த pant கடைகளில் புதிதாக வந்திருந்தது. இரண்டு பக்கங்களிலும் மூன்று கோடுகள் நாமம் வரைந்தது போலிருந்ததால் இதற்கு நாமம் pant என்று பெயர் சூட்டப்பட்டது.

கிளிபுளி - இவன் எப்பொழுது இவனுடைய அண்ணனின் பைக்கில் horn அடித்துக் கொண்டு சுற்றிக்கொண்டு இருப்பான். இவன் அண்ணனுடைய பைக் horn ஒரூ தினுசாக 'கிளிபுளி கிளிபுளி கிளிபுளி கிளிபுளி' என்று ஒலி எழுப்பியதால், அதையே அவனுடைய பெயராகிவிட்டது.

காக்கர்லால் - ஒருவன் கிட்டத்தட்ட காக்கையை போன்ற நிறமுடைய சிறுவன் என்பதால் அவனுக்கு அந்தப் பெயர். இவன் மைதானத்தில் விளையாடிவிட்டு வீட்டிற்கு கிளம்பும்போது இவன் நண்பர்கள் கூறுவது ஒன்றே ஒன்று தான், "பாத்து போடா, வழில காத்து கருப்பு வந்திச்சுன்னா அடிச்சரதே."

கு - இவன் பெயர் குமார், பெரும்பாலான சமயம் யாரையாவது கடுப்பெத்துவதே இவன் வேலை. இவன் பெயரின் முதல் எழுத்தை மட்டும் பயன்படுத்தினால் ஆளை கூப்பிட்ட மாதிரியும் இருக்கும் திட்டடிய மாதிரியும் இருக்கும் என்பதால் இவனை 'கு' என்று அழைத்தார்கள்.

திருவள்ளுவர் - இவர் ராமலிங்கம் காலனியில் கேபிள் ஆப்பரேட்டராக இருந்தார். இவர் திருவள்ளுவரை போல வயறு வரை தாடி வைத்திருந்ததால் இவருக்கு இந்த பெயர்.

Teespty - TVS 50 என்ற மிகப் பிரபலமான இரு சக்க்கற வாகனத்தின் பெயரை சுருக்கியதால் வந்த பெயர் தான் teespty.

புல்லெட் - இவன் மைதானத்தில் விளையாடுவதை இவனுடைய அம்மாவோ இல்லை அப்பவோ பார்த்துவிட்டால் போதும் துப்பகியிலிருந்து விடுபட்ட தோட்டா போல பிசிக்குவான். ஆகையால் இந்த பட்டப் பெயர்.

முயல் - இவர் தனது வீட்டில் இரண்டு மூன்று முயல்களை வளர்த்து வந்தார், முதலில் இவரை முயல் முருகேஷ் என்று கூப்பிட்டார்கள். இதுவே காலப்போக்கில் முயல் என்று சுருங்கி விட்டது. முயலை கடுப்பேத்த வேண்டுமென்றால் "நான் பார்த்த முயலுக்கு ரெண்டே கால்னு சொன்னாப் போதும், முயலுக்கு வேரிபிடித்துவிடும்.

அட்டு மாமி - ராமலிங்கம் காலனியில் யார் எந்த வேலைக்கு கிளம்பினாலும், கிளம்பும் பொது இந்த மாமியை பார்த்துவிட்டு போனால் அந்த வேலை உருப்படவே வாய்ப்பில்லை என்பது ஐதீகம். இதற்கு ஆதாரம், மைதானத்தில் கிரிகெட் விளையாடிய எவனும் அட்டு மாமி வீட்டுக்குள் பந்தை அடித்துவிட்டு, அதை அட்டு மாமியிடம் மன்றாடி வாங்கி வந்த பிறகு அவுட் ஆகாமல் இருந்த சரித்திரமே கிடையாது.

வல்லரசு - இவன் மஞ்சள் நிறத்தில் ஒரு பைக் வைத்திருந்தான். அதில் காலியாக இருந்த இடத்திலெல்லாம் விஜயகாந்த் திரைப்படத்தில் வரும் வசனங்களைப் போன்ற பழ மொழிகளை ஒட்டி வைத்திருந்ததால் இவனுக்கு அப்போது வெளியான விஜயகாந்த் திரைப்படத்தின் பெயரையே வைத்துவிட்டார்கள்.

மயில் பொறி - இவன் பெயருக்கு குறிப்பாக ஏதும் காரணம் கிடையாது. தமிழ் வாத்தியார் தமிழ் இலக்கியத்தில் எதோ ஒரு மயில் பொறியை பற்றி பாடம் நடத்திக்கொண்டிருக்கும் பொழுது தூங்கி மாட்டியதில் இருந்து இவனுக்கு இந்தப் பெயர்.

Samantha Fox - இந்தப் பெண் ஒரு முறை நடந்து போகையில், மல்லி அவளை பார்த்து, இவள் 'Samantha Fox' மாதிரியே இருக்கா என்று சொல்ல. Samantha Foxன என்ன டா என்றான் கிளிபுளி. அதற்கு, Samantha Fox தெரியாத டா? அது ஒரு கோடுரமான மிருகம் ஆபிரிக்க காடுகள்ல இருக்கும் என்றான் மயில் பொறி. அன்றிலிருந்து அவள் பெயர் Samantha Fox ஆனது.

Intelligent Fruit - இந்தப் பெயர் குறிப்பாக யாருக்கும் இல்லை, யாரவது முட்டாள்தனமாக எதையாவது சொன்னால் அவர்களை Intelligent Fruit என்றழைப்பது வழக்கம். ஞானப் பழாம் என்பதன் ஆங்கில வடிவம் தான் இந்த Intelligent Fruit.

Dockson - இவனுடைய நிஜப் பெயர் Dickson. இவன் மலயலத்துக்காரன் என்பதால் கொஞ்சம் 'ஒ' சப்தத்தை பெயருடன் சேர்த்து Dockson என்றளைக்கப்பட்டான்.

Ojiya - இவனுடைய நிஜப் பெயர் Vijaya (kumar) இவன் மலயலத்துக்காரன் கிடையாது ஆனால் இவன் டோக்சனின் நண்பன் என்பதால் இவன் பெயரிலும் 'ஒ' கலக்கப் பட்டது.

டாபர் - இவனுக்கு இந்தப் பெயர் ஏன் வந்தது என்று சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் இவன் முகம் பார்ப்பதற்கு doberman ரக நாய் போல இருப்பதால் இந்த பெயர் என்று நினைக்கிறேன்.

வாத்தியார் - இவன் பார்ப்பதற்கு Elimentary School வாத்யார் போல இருப்பன் ஆனால் செய்கிற வேலையெல்லாம் வில்லன்கமானது.

Road Runner - இவன் எப்பொழுது காலனிக்குள் நுழைந்தாலும், தன் பைக்கின் hornஐ, "பீப் பீப்" என்று கார்டூன் நெட்வொர்க்கில் வரும் road runnerஐ போல அழுத்திக்கொண்டே வருவான். ஆகையால் road runner என்று பெயர்.


இவை ராமலிங்கம் காலனியில் பயன்படுத்தப்பட்ட பட்டப் பெர்யர்களில் ஒரு சிறு பகுதி தான், இன்னும் நிறைய தெரிந்தகொள்ள வேண்டுமெனில் உடனே அங்கு குடி புக வேண்டும் இல்லையேல் எனக்கு இன்னும் கொஞ்சம் ஞயாபகம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.....



No comments:

Post a Comment